

ரஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்கள் ‘வீடியோ கேம்’ விளை யாடிய சிறுவன் ரத்த உறை வால் உயிரிழந்தார்.
ரஷ்யாவின் பாஸ் கோர்டாஸ்டான் பிராந்தியம் சாலி நகரைச் சேர்ந்தவர் ருஸ்டம் (17). ‘டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்’ எனும் வீடியோ கேம் விளையாட்டு மீது அவருக்கு ஆர்வம் அதிகம்.
இரு கோஷ்டிகளுக்கு இடையே சண்டை நடப்பது போன்ற இந்த விளையாட்டை ஹீரோ தரப்பில் இருந்து சிறுவர்கள் விளையாடு கின்றனர்.
அண்மையில் நேரிட்ட விபத்தில் ருஸ்டமுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் படுக்கையில் இருந்த அவர் முழுநேரமும் வீடியோ கேம் விளையாடத் தொடங் கினார். சாப்பிடுவது, தூங்கு வதை தவிர மற்ற நேரங்களில் வீடியோ கேமில் மூழ்கினார். இவ்வாறு இரவு பகலாக தொடர்ந்து 22 நாட்கள் வீடியோ கேமில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஒருநாள் ருஸ்டம் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வீடியோ கேம் பாதிப்பால் ரத்த உறைவு ஏற்பட்டு ருஸ்டம் உயிரிழந் திருப்பதாக டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
வளரிளம் பருவத்தினரை பெற்றோர் சரிவர கவனிக் காததே இத்தகைய துயரத் துக்கு முக்கிய காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.