

சவுதி அரேபியாவி்ல் பணிக்காக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று சவுதி அரேபியாஅரசு எச்சரித்துள்ளது
வளைகுடா நாடுகளும் கரோனா வைரசின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளன. இதில் சவுதி அரேபியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 157 பேர் ஆகவும் 611 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபிய அரசு சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை விருந்து, துக்க நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதித்துள்ளது. இருப்பினும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறிதுகூட தளர்வு காட்டவில்லை.
அந்நாட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து கல்ஃப் நியூஸ் கூறுகையில் “ கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்கு தளர்வுகளும் அளி்க்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்
இந்த மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறை தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்
அதேசமயம், மக்கள் விருந்துகள்,விஷேசங்களை வீடுகளில் நடத்தலாம் ஆனால், 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. துக்க வீடுகள், இறுதிச்சடங்கு போன்வற்றிலும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்
சவுதி அரேபியாவி்ல் உள்ள தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். ஊழியர்களுக்கு கிருமி நாசினிகள், சானிடைசர் வழங்கிட வேண்டும். ஊழியர்கள் தங்குமிடம், கழிவறை போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
ஷாப்பி்ங் மால்களில் நுழைவாயில், வெளியேறும் வாயிலில் கண்டிப்பாக சானிடைசர் வைக்கப்பட வேண்டும், கடைகளுக்குசெல்லும் மக்கள் சமூக விலகலைக் கடைபிடித்து நிற்க வேண்டும். கடைகளில் இருக்கும் பொருட்கள் கொண்டு செல்லும் தள்ளுபடி, கூடைகள், தரைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, ஆடை மாற்றும் அறை போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது