மக்களைப் பிரித்தாளும் இப்படி ஓர் அதிபரைக் கண்டதில்லை- முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்; இவருக்கு ஒன்றும் தெரியாது- ட்ரம்ப் பதிலடி

ட்ரம்ப்-மேட்டிஸ்.
ட்ரம்ப்-மேட்டிஸ்.
Updated on
1 min read

மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபடாது பிரித்தாளும் ஒர் அமெரிக்க அதிபரை முதன் முதலாக ட்ரம்ப் ரூபத்தில் சந்திக்கிறேன் என்று முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்ததற்கு ட்ரம்ப் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

‘எனக்கும், பராக் ஒபாமாவுக்கும் ஒரே விஷயத்தில் ஒத்துப் போகும் என்றால் அது ஜேம்ஸ் மேட்டிஸை நீக்கியதில்தான். உலகிலேயே அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு ஜெனரல் மேட்டிஸ். நான் அவரது ராஜினாமா கடிதத்தைக் கேட்டேன் அது குறித்து எனக்கு மிகவும் பிரமாதமான உணர்வே உள்ளது.

அவரது முதன்மை பலம் ராணுவம் அல்ல, தனிப்பட்ட பொது உறவுகளே. அவரை எனக்குப் பிடிக்காது, அவரது தலைமையையும் எனக்குப் பிடிக்காது, எனக்கு அவரிடத்தில் பிடிக்காதது நிறைய உள்ளது. நல்ல வேளையாக அவர் பதவியில் இல்லை.’ என்றார்.

ட்ரம்பிடமிருந்து இத்தகைய காட்டமான பதிலைத் தூண்டியது ஜேம்ஸ் மேட்டிஸின் பேட்டிதான், அவர், சிஎன்என் தொலைக்காட்சியில் ட்ரம்ப் பற்றிக் கூறும்போது, “அமெரிக்க மக்களை ஒன்றிணைக்காமல் தோல்வையடைந்த , என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான்.

மக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சி போல் பாசாங்கு கூட செய்யவில்லை ட்ரம்ப். மாறாக மக்களை பிரிக்க அவரே முயற்சிக்கிறார். இவரது இத்தகைய 3 ஆண்டுகால விளைவுகளைத்தான் இப்போது பார்க்கிறோம். 3 ஆண்டுகளாக ஒரு முதிர்ச்சியற்ற தலைமையின் செயல்களைப் பார்த்து வருகிறோம். அவர் இல்லாமலேயே நாம் ஒற்றுமையுடன் இருப்போம், நம் சிவில் சமூகத்தின் வலுவான தன்மையினால் நாம் ஒற்றுமையுடன் இருப்போம்” என்று பேசியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in