

அமெரிக்காவில் கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் ஜான் போரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவில் கருப்பின மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் குறித்து முதல் முதலாக பிரிட்டன் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “ அமெரிக்காவில் நடப்பது அச்சப்படக் கூடியது. ஏற்றுக் கொள்ள முடியாதது. போராட்டங்கள் நடத்தும் மக்களின் மன நிலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மேலும் போராட்டங்கள் நியாயமான முறையில் நடக்கும் என்றும் நான் நம்புகிறேன்” என்றார்.