

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு ஆங்காங்கே நிறவெறியை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் சமூக விலகலெல்லாம் காற்றில் பறந்துள்ளது, இது ஒருபுறமிருக்க கரோனா தாக்கமும் குறையவில்லை, ஒரேநாளில் 15,846 பேருக்கு கரோனா தொற்றியுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தரவுகளின் படி அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,27,806 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 863 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளதால் கரோனா தொற்று மேலும் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் ஒருங்கிணைப்புப் பணிக்குழுவில் இருக்கும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸி கூறும்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 100 மில் டோஸ்கள் வாக்சைன் அமெரிக்காவுக்குத் தேவைப்படும், அதற்குள் வாக்சைன் கைவசம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, 2021-ல் மேலும் வாக்சைன் டோஸ் தயாரிப்பு இரட்டிப்பாக வேண்டிய நிலை உள்ளது என்றார்.