ஐ.நா. பொதுக்குழு கூட்டம்: தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

ஐ.நா. பொதுக்குழு கூட்டம்: தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

நியூயார்க் ‘‘தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான செய்தியை வெளியி டுவதற்கு, வரலாற்று சிறப்பு மிக்க 70-வது ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’’ என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கடந்த ஜூலை 4-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதம் நேற்று செய்தியாளர்களிடம் விநியோகிக்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

தீவிரவாதத்தை துளி கூட பொறுத்துக் கொள்ள முடியாத நமது நிலையை, தீவிரவாதத் துக்கு எதிராக கடுமையான செய்தியை நாம் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதற்கு 70-வது ஐ.நா. கூட்டத்தை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அரசு சாரா சிலர் ஆயுதங்களை ஏந்தி உலகுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். அவர்களுக்கு கடுமையான தகவலை நாம் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சினையில் ஐ.நா. கூடுதல் முயற்சி மேற்கொண்டு பாதுகாப் புக்கு உள்ள புதிய சவால்களை கையாள வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் சாம்பலில் இருந்துதான் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இப்போது அரசு சாரா சர்வாதி காரிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். மேலும் ஐ.நா. மாநாட்டில் சர்வதேச தீவிரவாதத் துக்கு எதிராக விரிவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

முன்பெல்லாம் தீவிரவாதம், வன்முறை போன்றவை இல்லை. இப்போது தீவிரவாதம் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. அதை ஒடுக்க உலகளாவிய அளவில் திறமையான திட்டங் களை கொண்டு வர வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே செல் கின்றன. எதிர்பார்க்க முடியாத வகையில், தெளிவாக விளக்கம் அளிக்க முடியாத வகையில் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.

இவ்வாறு கடிதத்தில் மோடி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in