நம் நாட்டின் உயிர்களுக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும் நாம் ட்ரம்பை தோற்கடிக்க வேண்டும்: ஜோ பிடன்

நம் நாட்டின் உயிர்களுக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும் நாம் ட்ரம்பை தோற்கடிக்க வேண்டும்: ஜோ பிடன்

Published on

அமெரிக்க ராணுவத்தை அமெரிக்க மக்களுக்கு எதிராக ட்ரம்ப் பயன்படுத்துக்கிறார் என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பரவி பல போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கலவரம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறும்போது,” அமைதியான போராட்டக்காரர்கள் மீது ட்ரம்ப் ரப்பர் புல்லட்களை பயன்படுத்துகிறார். அமெரிக்க ராணுவத்தை அமெரிக்க மக்களுக்கு எதிராக ட்ரம்ப் பயன்படுத்துகிறார். நமது நாட்டில் உள்ள உயிர்களுக்காகவும், நமது குழந்தைகளுக்காகவும் நாம் ட்ரம்பை தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in