ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து நெரிபட்டு மரணம், இது ஒரு மனித விரோதக் கொலை: பிரேதப் பரிசோதனை அறிக்கை

ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து நெரிபட்டு மரணம், இது ஒரு மனித விரோதக் கொலை: பிரேதப் பரிசோதனை அறிக்கை
Updated on
1 min read

அமெரிக்காவில் போலீஸ் பூட்ஸ் காலால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த கருப்பர் ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் “இருதய நுரையீரல் அடைப்பினாலும் கழுத்து நெரிபட்டும் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த விதம் ‘மனித விரோதக் கொலை’ என்று மினியாபோலீஸ் மருத்துவ ஆய்வாளர் தெரிவித்தார். ஆனால் மரணமடைந்த விதம் சட்ட ரீதியாகத் தீர்மானிக்கப்படும் நோக்கம் சார்ந்த ஒரு கொலைச்செயல் என்று கூறுவதற்கில்லை என்று பிரேதப் பரிசோதனையில் ரெண்டுங்கெட்டானாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினசோட்டா சட்டத்தின் படி, ‘பிரேதப் பரிசோதனை மருத்துவ ஆய்வாளர் நடுநிலையானவர், சுதந்திரமாகச் செயல்படுபவர் எனவே இவர் சட்ட ரீதியான அதிகாரம் அல்லது சட்ட அமலாக்க முகமை தொடர்புடையவர் அல்ல’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கழுத்து அழுத்தப்பட்டதால் குரல்வளை நெரிபட்டு இறந்திருக்கிறார் என்பதை பிரேதப் பரிசோதனை கூறியுள்ளது, ஆனால் இது கொலைக்குற்றத்துக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை.

இது குடும்பத்தினர் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையாகும். டாக்டர் மைக்கேல் பேடன், டாக்டர் அலீசியா வில்சன் ஆகியோர் இந்த பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டனர். கழுத்து மிதிக்கப்பட்டதால் குரல்வளை நெரிக்கப்பட்டு மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

-ஏஜென்சி செய்திகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in