வெறுப்புக்கும், இனவெறிக்கும் சமூகத்தில் இடமில்லை: சத்யா நாதெள்ள, சுந்தர் பிச்சை கண்டனம்

சத்யா நாதெள்ள, சுந்தர் பிச்சை : கோப்புப்படம்
சத்யா நாதெள்ள, சுந்தர் பிச்சை : கோப்புப்படம்
Updated on
2 min read


நம் சமூகத்தில் வெறுப்புக்கும், இனவெறிக்கும் ஒருபோதும் இடமில்லை. இரக்கமும், ஒருவரைப்புரிந்துகொள்ளுதலே தொடக்கம், ஆனால், அதிகாகமாக நாம் பிறருக்காகச் செய்ய வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ள அமெரிக்க ஆப்பிரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் மினியாபோலீஸ் மாநிலம் மின்னசோட்டா நகர போலீஸ் அதிகாரி டேரிக் சாவின், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரைக் கையில் விலங்கு பூட்டி, கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்திருந்தார்.

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் உயிரிழந்தார். இந்தக் காட்சியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவின் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பிவிட்டது.

அமெரிக்காவின் 40-க்கும்ம ேமற்பட்ட நகரங்களில் கடந்த இரு நாட்களாக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ள ட்வி்ட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் “ நம்முடைய சமூகத்தில் இனவெறிக்கும், வெறுப்புக்கும் ஒருபோதும் இடமில்லை. இரக்கம் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்தான் மற்றவர் மீதான அக்கறையின் தொடக்கம்.

இதை நாம் அதிகமாகச் செய்ய வேண்டும். அமெரிக்க ஆப்பிரிக்க மக்களுக்காகவும் கறுப்பின மக்களுக்காவும் நான் ஆதரவாக இருப்பேன். நம்முடைய சமூகத்தையும், இந்த நிறுவனத்தையும் கட்டமைக்க அவர்களும் கடமைப்பட்டுள்ளார்கள், உறுதுணையாக இருந்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழரான சுந்தர் பிச்சையும் ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு கண்டனத்தையும், அமெரிக்க ஆப்பிரிக்க மக்களுக்காக இரக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

சுந்தர் பி்ச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “ அமெரிக்காவின் கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் ஹோம்பேஜ்கள் மூலம் கறுப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும் இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட், பிரயோன்னா டெய்லர், அகமது அர்பெரி, உள்ளி்ட்டோருக்கும், வலுவாக ஆதரவு குரல் எழுப்பமுடியாதவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து ஆதரவு தெரிவிக்கிறோம். யாரெல்லாம் துக்கமாகவும், கோபமாகவும் , அச்சமாகவும், வேதனையுடனும் இருக்கிறார்களோ அவர்கள் தனியாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்

மேலும், கூகுள் நிறுவனத்தின் ஹோம்பேஜ்ஜில் இன சமத்துவத்துக்கு ஆதரவாக இருப்போம், கூகுளில் தேடுவோர் அனைவரும் ஆதரவாக இருப்போம் என்ற வாசகம் கொண்ட ஸ்க்ரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in