Published : 01 Jun 2020 08:10 PM
Last Updated : 01 Jun 2020 08:10 PM

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்: சீனா மீண்டும் அறிவிப்பு

இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அடிப்படையில் எல்லை பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளும் என சீன வெளியுறவுத்துறை செய்திததொடர்பாளர் சாஹோ லலிஜன் மீண்டும் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்த நிலையில் 3-ம் நாட்டின் மத்தயஸ்தம் ஏதும் தேவையில்லை என சீனா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் புகார் கூறப்படுகிறது. அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் சீன அதிபர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இந்திய எல்லையில் ஒட்டுமொத்த நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இதைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். ஆனால் அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை என சீனா மற்றும் இந்தியா இருநாடுகளும் ஏற்கெனவே தெரிவித்து இருந்தன.

சீன வெளியுறவுத்துறை செய்திததொடர்பாளர் சாஹோ லலிஜன்

இந்தநிலையி்ல் இந்த விவகாரம் தொடர்பாக சீனா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்திததொடர்பாளர் சாஹோ லலிஜன் கூறுகையில் ‘‘இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அடிப்படையில் எல்லை பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளும்.

இருநாட்டு எல்லை பகுதியில் தற்போது அமைதி நிலவி வருகிறது. அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எல்லை பிரச்சினை தொடர்பாக ராஜ தந்திர அடிப்படையிலும் ராணுவ தகவல் பரிமாற்றமும் திறந்தே உள்ளது. எனவே இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ளும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x