Published : 01 Jun 2020 01:12 PM
Last Updated : 01 Jun 2020 01:12 PM

கரோனா: அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 598 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அங்கு 1,04,356 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை அமெரிக்காவில் 17,88,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 62,67,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,73,961 பேர் உயிரிழந்துள்ளனர். 28,47,541 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x