பிரேசிலில் 5,00,000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பிய அமெரிக்கா

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.
Updated on
1 min read

பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,992 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 29,341 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கரோனாவால் 16,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,992 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 29,341 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2,06,500 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக சுமார் 20 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் (அமெரிக்காவில் 18,37,170 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்), பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசில் மீது சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா பயணத் தடை விதித்தது.

கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 62,67,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,73,961 பேர் உயிரிழந்துள்ளனர். 28,47,541 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in