Last Updated : 31 May, 2020 02:16 PM

 

Published : 31 May 2020 02:16 PM
Last Updated : 31 May 2020 02:16 PM

இறந்த கரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்கும் போது மருத்துவர்களுக்கு அடி உதை: பாகிஸ்தானில் பரபரப்பு சம்பவம்

கரோனா வைரஸ் நோயாளி ஒருவர் இறந்ததையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் உறவினர்கள் உட்பட கும்பல் ஒன்று கராச்சி மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களை அடித்து உதைத்ததோடு மருத்துவமனை பொருட்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர் ரூத் பாஃபு மருத்துவமனை கராச்சியில் உள்ளது, இந்த மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி சனிக்கிழமையன்று இறந்தார். சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கையில் பாசிட்டிவ் என்று வந்தது.

ஆனால் இறந்தவர்களின் உறவினர்களோ இதனை ஏற்க மறுத்து அவருக்கு கரோனா கொரோனாவெல்லாம் கிடையாது, அவர் நார்மாலகத்தான் இருந்தார் என்று கோபமடைந்தனர்.

இந்நிலையில் இறந்தவரின் சொந்தக்காரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என்று 70 பேர் மருத்துவமனைக்குள் புகுந்தனர். உடலை வலுக்கட்டாயமாக கொண்டு சென்றனர். மேலும் ஸ்ட்ரெச்சர்கள், மருத்துவ வாகனங்களை அடித்து நொறுக்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, அரசாங்கம் நிர்ணயித்த வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் மருத்துவர்கள் கடைப்பிடிக்கின்றனர். நாங்கள் அரசு ஊழியர்கள், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கடைப்பிடிக்கின்றோம். அவர் இருதய நோய்க்காகத்தான் வந்தார். மருத்துவர்கள்தான் கரோனா சந்தேகப்பட்டு டெஸ்ட் எடுத்தனர். கரோனா டெஸ்ட் முடிவு வர நேரம் எடுக்கும். இதற்கு கோபப்பட்டால் என்ன செய்வது? என்று தெரிவித்துள்ளது.

உறவினர்களில் ஒருவர் பெண் டாக்டர் கன்னத்தில் அறைந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

கரோனா வைரஸை பாகிஸ்தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இம்ரான் அமைச்சரின் பேச்சைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம், அவர், கரோனா கடவுள் கொடுத்த தண்டனை என்று பேசியுள்ளார். இம்ரான் கான் அரசுக்கும் கரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கான திட்ட வரையறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அங்கு விமர்சனம் எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,496 ஆக அதிகரித்துள்ளது. 1483 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x