

கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற நபர் போலீஸ் காவலில் இறந்ததையடுத்தும் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது கழுத்தில் தன் பூட்ஸ் காலால் அழுத்திததும் கருப்பரின மக்களை மட்டுமல்லாது பலரையும் தட்டி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் 16 நகரங்கள் பற்றி எரிகின்றன. நிறைய கைதுகள், வன்முறைகள், தீவைப்புச் சம்பவங்கள், பல நகரங்களில் ஊரடங்கு என்று அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிப்படைந்து கிடக்கிறது.
இந்நிலையில் புளோரிடா மாகாணம் டாலஹஸ்ஸீ என்ற இடத்தில் பொதுமக்கல் ஆர்ப்பாட்ட நடத்திக் கொண்டிருக்கும் போது வேகமாக லாரியை ஒரு நபர் கூட்டத்தினிடையே லாரியை செலுத்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய காட்சி அங்கு கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது லாரி மீது பாட்டில் ஒன்று வந்து விழுந்ததாகவும் அதனால் ட்ரைவர் ஆத்திரமடைந்து லாரி மக்களிடையே வேகமாகச் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த லாரி தப்பிச் செல்ல பார்த்தது, ஆனால் மக்கள் அதை விரட்டிப்பிடித்து நிறுத்திய பிறகு போலீஸார் அவரைக் கைது செய்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
லாரி ஓட்டுநனருக்கு காப்பு மாட்டிய போலீஸார் அவர் பெயரை வெளியிட மறுத்ததோடு அவர் மீது வழக்கு உண்டா என்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
கருப்பரினத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், “எங்கள் நாடு கரோனா நோயில் உள்ளது, ஆனால் நாங்கள் தெருவுக்கு வந்திருக்கிறோம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் எங்கள் குரல்கள் அவர்களுக்குக் கேட்கவே கேட்காது” என்றார்.
மொத்தத்தில் கொந்தளிப்பில் அமெரிக்க மக்கள் என்பதையே இந்தச் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன.