

ஒருவர் தும்மும் போதும், இருமும்போதும் வெளிவரும் நீர்த்துளி, மூச்சுவிடுதல் போன்றவற்றின் மூலம் பரவும் கரோனா வைரஸ் ஒவ்வொரு காலநிலையிலும் வெவ்வேறு விதமாகப் பரவும் எனத் தெரியவந்துள்ளது.
கோடைக் காலத்தில் இரு நபர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி விட்டு சமூகவிலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் மழைக் காலத்தில் அந்த சமூக விலகல் 20 அடி இருக்க வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கிறது. அதாவது கரோனா பரவும் வேகம் 20 அடி தொலைவு இவரை இருக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் ஆய்வாளர்கள் கரோனா வைரஸ் பரவும் அளவுகுறித்துஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “ கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தற்போது உலகில் அனைவரும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைக் கடைபிடித்து வருகின்றனர்.
ஆனால் இது கோடைக் காலத்துக்கு வேண்டுமானாலும் பொருந்தும். கரோனா வைரஸ் அதிகமாக, வேகமாகப் பரவும் ஏதுவான காலநிலை வரும் போது இந்த சமூக விலகல் இடைவெளி போதுமானதாக இருக்காது. அப்போது குறைந்தபட்சம் 20 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
முன்பு நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, தும்முதல், இருமுதல், பேசுதல் மூலம் 40 ஆயிரம் எச்சில் துளிகள் பரவும். இவை நொடிக்கு சில மீட்டர் முதல் நூற்றுக்கணக்கான மீட்டர் பயணிக்கும் தன்மை கொண்டவை
காலநிலை, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றுக்கு ஏற்ப காற்றில் எச்சில்துளிகள் பரவும் அளவு மாறுபடும் என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய எச்சில் துளிகள் தரையோடு படிந்து விடும்.
ஆனால் சிறிய எச்சில் துளிகள், தும்மும்போது வரும் சிறிய நீர்த்துளிகள் வெளிவந்தபின் வேகமாக ஆவியாகி, நீண்டநேரம் காற்றில் வைரஸைத் தாங்கி நிற்கும் தன்மை கொண்டவை. ஆதலால் ஒவ்வொரு காலநிலையிலும் வைரஸ் பரவும் வேகம், காற்றில் கலந்திருக்கும் நேரம் ஆகியவை மாறுபடும்
எங்களின் ஆய்வுகளின்படி அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு(சிடி) அமைப்பு பரிந்துரைத்துள்ள சமூக இடைவெளியான 6 அடி என்பது குறிப்பிட்ட காலநிலைகளுக்கு போதுமானதாக இருக்காது.
பனிக்காலம், மழைக்காலம், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காலநிலைகளில் சமூகஇடைவெளி என்பது 20 அடி அதாவது 6 மீட்டர்இருக்கவேண்டும். அப்போதுதான் கரோனா பரவுவதில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்,
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளில் அந்த வெப்பம் கரோனா பரவுவதைத் தடுத்து நிறுத்தும் அல்லது பரவலைக் குறைக்கும் எனக் கூற முடியாது.
ஆனால், அதிகமான ெவப்பம், வறண்டவானிலையில் ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் வெளியேறும் எச்சில்துளிகள் விரைவாக ஆவியாகி, காற்றில் நீண்டநேரம், நீண்டதொலைவுக்கு வைரஸைக் கொண்டு செல்லும்.
பொதுமக்கள் கூடுமிடங்களில் பொதுவாக குளிர்சாதன வசதி இருக்கும் போதும், அங்கிருக்கும் ஈரப்பதமான சூழல் விரைவாக கரோனா வைரஸ் பரவ ஏதுவா இருக்கும்.
ஆதலால் வெளியே செல்லும் போது மக்கள் கட்டாயமாக முகக்கவசத்தை அணிந்து செல்வது காற்றில் கரோனா வைரஸ் பரவினாலும், அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளமுடியும். சமூக விலகலை தீவிரமாகக் கடைபிடிப்பதன் மூலம் இன்னும் தீவிரமாக கரோனா பரவுவதைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது