Published : 29 May 2020 06:39 AM
Last Updated : 29 May 2020 06:39 AM

வீட்டில் இருந்து பணி புரிவதால் கூகுள் நிறுவன ஊழியர்களுக்குரூ.75 ஆயிரம் ஊக்கத் தொகை

கரோனா வைஸ் பரவலைத் தடுக்கபெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிட்டுள்ளன. கூகுள் நிறுவனம் ஜூலை 6-ம் தேதி முதல் அலுவலகம் படிப்படியாக செயல்படத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களுக்கு இந்ததொகை வழங்கப்படும் என்றும்,ஜூலை 6-ம் தேதி முதல் அலுவலகங்கள் படிப்படியாக செயல்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அலுவலகம் வந்து பணிபுரிய விரும்பும் பணியாளர்கள், சுழற்சிஅடிப்படையில் படிப்படியாக அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர். அலுவலகத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 10சதவீதம் பேரை முதல் கட்டமாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்துக்குள் 30சதவீத பணியாளர்கள் அலுவலக பணிக்கு சுழற்சி அடிப்படையில் திரும்புவர் என தெரிகிறது. நிலைமை சீரடைய அலுவலகம் வரும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த ஆண்டில் பெரும்பாலான நேரம் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணி புரிய வேண்டிய சூழல் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு ஆயிரம் டாலர் (சுமார் ரூ.75 ஆயிரம்) அலவன்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலக பணிகளைவீட்டில் இருந்தே மேற்கொள்வதால் அதற்குரிய பர்னிச்சர் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு உதவியாக இத்தொகை வழங்கப்படுவதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x