ஈரான் மக்களை கொதித்தெழுச் செய்த ஆணவக் கொலை

ஆணவ கொலைச் செய்யப்பட்ட சிறுமி | படம் உதவி: ட்விட்டர்
ஆணவ கொலைச் செய்யப்பட்ட சிறுமி | படம் உதவி: ட்விட்டர்
Updated on
1 min read

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம் தான் ஈரானில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க முடியாத அவர் தந்தை அவரை ஆணவ கொலை செய்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டுள்ளார். ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டால் ஈரானின் சட்டவிதிப்படி அவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தற்போது இந்த மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். ரோனிவின் மரணத்துக்கு நீதி கேட்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் சமூக வலைதளங்களில் பலரும் #RominaAshrafi என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆணவ கொலைத் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in