மோடிக்கு ஒபாமா வாழ்த்து: அமெரிக்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு

மோடிக்கு ஒபாமா வாழ்த்து: அமெரிக்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

16-வது நாடாளுமன்ற தேர்தல் நாடெங்கும் 9 கட்டங்களாக கடந்த ஒரு மாதமாக நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு அதே தினத்தில் முடிவுகள் வெளியாயின.

இந்நிலையில் நேற்று இரவு, அமெரிக்க அதிபர் ஒபாமா, நரேந்திர மோடிக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.

ஒபாமா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தீர்மானமான முடிவு கிடைத்துள்ளது என்றும், மோடி தலைமையில், உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக கிடைக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

உலக பொருளாதாரம் தொடர்பாகவும், இரு நாட்டு உறவு தொடர்பாகவும் மோடியுடன் அவர் பேசினார். மேலும் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அரசு அழைப்பும் விடுத்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ட்விட்டரில் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு உறவை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2005–ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம், அதில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in