

சீனாவில் புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வூஹானைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள், “சீனாவில் புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் தொற்று உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 300க்கும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று இல்லாமல் கரோனா பாதித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வூஹானைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து உலக நாடுகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற சீன மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் என்ற உண்மையை சீனா முழுமையாக மறைத்துவிட்டது. மேலும் வைரஸின் ஆரம்பகால மூலக்கூறுகளையும் சீனா அழித்துவிட்டது. இப்போது சீனா நாடகமாடுகிறது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
சீனாவில் கரோனா தொற்று 82,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகியுள்ளனர். 78,268 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 55,00,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,46,721 பேர் குணமடைந்த நிலையில் 23,02,069 பேர் பலியாகியுள்ளனர்.