Published : 25 May 2020 09:58 am

Updated : 25 May 2020 10:01 am

 

Published : 25 May 2020 09:58 AM
Last Updated : 25 May 2020 10:01 AM

கரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை

s-african-president-announces-further-easing-of-curbs-from-june-1
தென் ஆப்பிரிக்க அதிபர் அதிபர் சிரில் ரமபோசா : கோப்புப்படம்

கரோனா வைரஸ் மேலும் பரவத்தான் இருக்கிறது. நாம் சிறிது காலம் கரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் தென் ஆப்பிரிக்க அரசு இறங்கி உள்ளது

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறியதாவது:

“ ஊரடங்கின் மூலம் நாம் வைரஸ் பரவும் காலத்தை தாழ்த்த முடியும், ஆனால் வைரஸ் பரவுவதை நிறுத்த முடியாது. தடுப்பூசி கிடைக்கும்வரை கரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த முடியாது. கரோனா வைரஸ் நமது மக்களிடையே பரவத்தான் போகிறது. இதன் அர்த்தம் நாம் கரோனா வைரஸுடன் சில நாட்கள் வாழப் பழக வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கரோனா பரவல் நம் நாட்டில் தற்போது தீவிரமாக இருப்பதாக நமது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் மொத்தமாக பதிவு செய்யபட்ட கரோனா பதிவுகளிl ஒரு பங்கு கடந்த வாரத்தில் மட்டுமே பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதி விரைவாக அதிகரிக்கும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம். நாம் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட பகுதிகளை வேறு விதமாக அணுக வேண்டும். பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் செய்யப்பட உள்ளன” .

இவ்வாறு அதிபர் ரம்போசா தெரிவித்தார்.

முன்னதாக, " நம் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் ஆகியவற்றை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் மிகக் கவனத்துடன் ஊரடங்கைத் தளர்த்தி வருகிறோம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பிறகும், மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டுக்கு என்றில்லை, பிற நாடுகளிலும் இதான் நிலைமை.

அந்த நாடுகளும் நம்மைப் போல பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன என்று " சில நாட்களுக்கும் முன்னரே அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை கரோனா தொற்றால் 22,583 பேர் பாதிக்கப்படுள்ளனர். 11,100 பேர் குணமடைந்துள்ளனர். 439 பேர் பலியாகி உள்ளனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனா வைரஸ்கரோனா தொற்றுதென் ஆப்பிரிக்காதென் ஆப்பிரிக்க அதிபர்சிரில் ரமபோசாசமூக இடைவெளிபொருளாதாரம்ஊரடங்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author