Published : 25 May 2020 09:37 AM
Last Updated : 25 May 2020 09:37 AM

கரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர் உயர்வு

பாலோ ஆல்டோ

பேஸ்புக் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு. மார்ச் இரண்டாவது வாரத்தில் 5,770கோடி டாலராக இருந்தது. தற்போது இவரது சொத்து மதிப்பு8,750 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ஜூகர்பெர்க்.

பேஸ்புக் நிறுவன பங்குகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து ஒரு பங்கு விலை 230.75 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி உள்ளது. கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மெசஞ்சர் ரூம் மற்றும் ஜூம் உள்ளிட்ட வசதிகளை பேஸ்புக் உருவாக்கித் தந்துள்ளது.மெசஞ்சர் ரூம் சேவையில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை உரையாட முடியும். இதனால் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வீட்டிலிருந்தபடி பணி புரிவது என்பது பேஸ்புக் ஊழியர்கள் மத்தியில் ஒரு பாசிட்டிவான தாக்கத்தை உருவாக்கி உள்ளது. வீட்டிலிருந்து பணி புரியும்போது அவர்களது பங்களிப்பானது வழக்கமாக அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதை விட அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x