

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் வாங் யான்யி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் இறுதியில் வூஹானில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக வூஹான் ஆய்வக இயக்குநர் வாங் யான்யி சீன அரசு தொலைக்காட்சியான சிஜிடிஎன் சேனலுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வூஹான் ஆய்வகத்தில் இருந்துவைரஸ் பரவியதாக கூறுவது கட்டுக்கதை. கடந்த டிசம்பர் 30-ம் தேதிபுதிய வகை நிமோனியா காய்ச்சல் பரவுவது எங்கள் கவனத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி மாதிரியை ஆய்வு செய்தபோது, புதிய வகை கரோனா வைரஸ் என்பது தெரிய வந்தது. இந்த புதிய கரோனா வைரஸ் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்போதுதான் முதல் முறையாக எதிர்கொள்கிறோம். அப்படியிருக்கும் போது எங்கள் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் எவ்வாறு பரவியிருக்க முடியும்.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் வவ்வால்களிடம் இருந்து கரோனா வைரஸை பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்களிடம் 3 வகையான கரோனா வைரஸ் மூலக்கூறுகள் உள்ளன. இதில் ஒருவகை மூலக்கூறு, சார்ஸ்வைரஸுடன் 96 சதவீதம் ஒத்துப் போகிறது. புதிய வகை கரோனா வைரஸுடன் எங்களிடம் இருக்கும் வைரஸ் மூலக்கூறு 79.8 சதவீதம் மட்டுமே ஒத்துப் போகிறது.
உலகில் தற்போது பரவி வரும்புதிய வகை கரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று பெரும்பாலான சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அறிவியல் சார்ந்த விவகாரம். அறிவியல் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க முடியும்.இதற்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு வாங் யான்யி தெரிவித்துள்ளார்.
| விசாரணைக்கு தயார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது, எவ்வாறு பரவியது என்பது குறித்த சர்வதேச விசாரணைக்கு சீனா தயாராக உள்ளது. ஆனால் அந்த விசாரணை நேர்மையாக, பாரபட்சமின்றி நடைபெற வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது’’ என்றார். |
| சீனா மறைத்த உண்மைகள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து உலக நாடுகளிடம் விழிப் |