பாகிஸ்தான் விமான விபத்து: பலி 97 ஆக அதிகரிப்பு; 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் விமான விபத்து: பலி 97 ஆக அதிகரிப்பு; 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தான் பிஐஏ விமான விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது.

இதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த விமான விபத்தில் 97 பேர் பலியானதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் சிந்து மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் இதுவரை 52,437 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,101 பேர் உயிரிழந்துள்ளனர். 16,653 பேர் குணமடைந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in