Published : 20 May 2020 09:01 PM
Last Updated : 20 May 2020 09:01 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பாதிப்பு 25,063 ஆக அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 873 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 873 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,063 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 227 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதுமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்ய பல்வேறு நடவடிக்கைகளையும், நிதித் திட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து வருகிறது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 49,89,061 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,24,961 பேர் பலியாகியுள்ளனர். 19, 59,191 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x