Published : 20 May 2020 05:33 PM
Last Updated : 20 May 2020 05:33 PM

பொருளாதாரப் பேரிடி: 6 கோடி மக்களுக்கும் மேல் கடுமையான வறுமையில் வீழும் அபாயம்- உலகவங்கி எச்சரிக்கை

கரோனா வைரஸ் நெருக்கடியினால் உலக மக்கள் தொகையில் 6 கோடி பேர் கடுமையான, தீவிர வறுமைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக உலகவங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் எட்டிய சாதனைகளையெல்லாம் கரோனா அழித்து விடும் என்கிறார் அவர்.

இது தொடர்பாக உலகவங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறியதாவது:

அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்கள் செலவிடும் நோக்குடன் உலக வங்கி 100 நாடுகளுக்கு ஏற்கெனவே உதவி புரிந்து வருகிறது.

இந்த 100 நாடுகளில்தான் உலகின் 70% மக்கள் வசித்து வருகின்றனர். உலகப்பொருளாதாரம் 5% சரிவு கண்டால் அது உலகின் ஏழை நாடுகள் மீது சொல்லொணா தாக்கம் செலுத்தும்.

கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வறுமை ஒழிப்பு முயற்சிகளையெல்லாம், சாதனைகளெல்லாம் அழித்தொழிக்கும் விதமாக கரோனாவினால் ஏற்படும் பொருளாதார சரிவினால் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசி, பட்டினி, வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கணித்துள்ளோம்.

ஏழைநாடுகளின் சிதைந்த சுகாதார அமைப்புகளை மீட்க உலக வங்கி இதுவரை 5.5 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. எனவே வளர்ந்த நாடுகள் இப்போதும் முன்வர வேண்டும் அப்போதுதான் 6 கோடி மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்க முடியும்.

இவ்வாறு கூறினர் உலகவங்கியின் தலைவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x