

அமெரிக்காவிலிருந்து வெளி யேறும் பசுமை இல்ல வாயுக் களை குறைப்பதற்கான புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள பருவநிலை மாறுபாடு மாநாட்டில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முழுமை யாக பங்கேற்கும் எனவும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:
எமது எதிர்காலத்துக்கும், வருங்கால தலைமுறைக்கும் பருவகால மாறுபாடு போன்ற அபாயகரமான அச்சுறுத்தல் வேறெதுவும் இல்லை. வரும் 2030-ம் ஆண்டுக்குள், அமெரிக் காவின் அனல் மின் நிலையத்தி லிருந்து வெளியேறும் கார்பன் மாசுபாடு 32 சதவீதம் குறைக்கப் படும்.
அதாவது, சுமார் 87 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படும். 10.8 கோடி அமெரிக்க வீடுகளில் பயன்படுத் தப்படும் மின்சாரம் காரணமாக, ஏற்படும் ஒவ்வொரு கிராம் மாசுபாடும் தவிர்க்கப்படும்.
இது, சாலைகளில் ஓடும் 16.6 கோடி கார்களை உடனடியாக செயல்படாமல் நிறுத்தி வைப்பதற்குச் சமம்.
வரும் டிசம்பரில் (பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாடு) மனிதகுல வரலாற்றில் சர்வதேச பருவநிலை மாறுபாடு ஒப்பந் தங்களில் மிகச்சிறந்தவைகளில் ஒன்றை நாம் முன்வைக்கப்போ கிறோம்.
நான் உங்களை முட்டாளாக்க விரும்பவில்லை. பருவநிலை மாறுபாடு அபாயத்தை எதிர்கொள் வது மிகக்கடினமான ஒன்று.
தனிப்பட்ட ஒரு நடவடிக் கையோ, தனிப்பட்ட நாடோ இந்தப் பூமிக்கு விடப்பட்ட எச்சரிக்கையை சுயமாக எதிர் கொள்ள முடியாது. அமெரிக்கா இதை முன்னெடுக்கவில்லை எனில், மற்ற நாடுகளும் முன் வராது. சீனா இதில் மிக சிரத்தை யுடன் ஆர்வம் காட்டுவது கூட, நாம் இதில் இறங்கியிருக்கிறோம் என்பதால்தான். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.