Published : 20 May 2020 11:25 AM
Last Updated : 20 May 2020 11:25 AM

உறுதியாக இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்: இந்தியாவுக்கு ஜாக்கி சான் வாழ்த்து 

கரோனாவுக்கு எதிரான சண்டையில் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கி சான் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 1,06,886 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்திய மாநில அரசுக்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுக்கும் முயற்சிகளை பிரபல சீன திரைப்பட நடிகரான ஜாக்கி சான் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டொங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம். எனது வாழ்த்துகளையும், அன்பையும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் இன்று கடுமையான காலத்தை எதிர்கொண்டுள்ளோம் என்று எனக்கு நன்கு தெரியும். நம்பிக்கையாக இருங்கள். உங்கள் நாட்டின் அறிவுரையைப் பின்பற்றுங்கள். உறுதியாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். சிறப்பான எதிர்காலம் அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 49, 89,061 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,24,961 பேர் பலியாகி உள்ளனர். 19, 59,191 பேர் குணமடைந்துள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x