

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் அவசரப்பட்டு லாக்டவுனை தளர்த்த வேண்டாம். மக்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இந்த ஆபத்தான எதிரியை எதிர்த்து நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் தெரிவித்தார்
உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு ஜெனிவாவில் நேற்று தொடங்கியது. கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கரோனா ைவரஸ் எவ்வாறு பரவியது, உருவானது, இதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன குறித்து வெளிப்படைத்தன்மையுடன், சுயசார்பு விசாரணை நடத்த வேண்டும் என்று 120 நாடுகள் கோரி்க்கை வைத்திருந்தன.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக சுகாதாரஅமைப்பு விரைவில் முழுமையான விசாரணை தொடங்கப்படும் எனத் தெரிவித்தது. அப்போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதானன் பேசியதாவது:
உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று கரோனா வைரஸ் குறித்த உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை குறித்த வெளிப்படைத்தன்மையான,முழுமையான சுயசார்பு விசாரணை நடத்த ஒப்புக்கொள்கிறோம். விரைவில் உரிய காலத்தில் விசாரணை தொடங்கும்.
உலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம், கரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரிஸின் ஆபத்தை எதி்ர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுகள் அவசரப்பட்டு லாக்டவுனை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்
கரோனா வைரஸ் ஆபத்தான எதிரி, ஆபத்தான அம்சங்களின் கலவையுடன் கரோனாஇருக்கிறது. இ்ந்த வைரஸ் மிகவும் திறன்மிக்கது, வேகமாகப் பரவக்கூடியது, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது.
கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்கள் தொகையில்அதிக நோய்எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 20சதவீதத்துக்கு மேல் இல்லை, பெரும்பலான இடங்களில் 10 சதவீதத்துக்கும் மேல் இல்லை. இன்னும் விளக்கமாகக் கூறினால், உலக மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் இந்த வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
உலகப்பொருளாதார பெரு மந்தத்துக்குப்பின், உடல்ரீதியான பிரச்சினைகள் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் சேதத்தை கரோனா வைரஸ் உண்டாக்குகிறது. இந்த வைரஸால் சமூகத்தில் உள்ள ஏழைகள், பணக்காரர்கள்,சிறியவர்ள், பெரியவர்கள்அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்
கரோனா வைரஸ் வீரியமாவதற்கு முன்பே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. சீனாவில் 100 உயிரிழப்புகளை தொடுவதற்கு முன்பே நாங்கள் உலக நாடுகள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தினோம். இருப்பினும் கரோனா வைரஸ் மூலம் அனைவரும் நாம் பெரும் பாடத்தை கற்றுள்ளோம். இந்த அனுபவத்தின் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், நாடும், அதை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இ்வ்வாறு அதானன் தெரிவித்தார்