ஒபாமா முற்றிலும் திறமையற்ற அதிபர் : ட்ரம்ப் பதிலடி

ஒபாமா முற்றிலும் திறமையற்ற அதிபர் : ட்ரம்ப் பதிலடி

Published on

கரோனா வைரஸ் பரவலை டிரம்ப் அரசு கையாளும் விதம் குறித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஒபாமாவை முற்றிலும் திறமையற்ற அதிபர் என்று டிரம்ப் பதிலடி அளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுமோது,” ஒபாமா திறமையற்ற அதிபர். முற்றிலும் திறமையற்ற அதிபர். அவரைப் பற்றி அவ்வளவுதான் சொல்ல இருக்கிறது” என்று ஒபாமாவை விமர்சித்தார்.

உலக அளவில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிக அளவில் உள்ளது.சுமார் 15 லட்சம் பேர் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவை கடந்து பிற நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சமயத்தில், டிரம்ப் மிக அலட்சியமாக நடந்து கொண்டார் என்று கரோனாவை அவர் கையாளும் விதம் குறித்து பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா, கரோனா பரவலை டிரம்ப் அரசு கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

ஒபாமா நேரடியாக டிரம்ப் பெயரை குறிப்பிடாமல்,” அதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை கரோனா வெளிச்சமிட்டுக்காட்டி இருக்கிறது. அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் கடமையை செய்வதுபோல் நடிக்கக் கூட இல்லை” என்று அவர் விமர்சித்தார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 48, 93,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in