Published : 19 May 2020 08:09 AM
Last Updated : 19 May 2020 08:09 AM

ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு மாநாடு தொடக்கம்; கரோனா வைரஸ் பரவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இந்தியா உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தல்

கரோனா வைரஸ் தோன்றியது எப் படி, அது பரவ யார் காரணம் என்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பிடம் (டபிள்யூஎச்ஓ) ஐரோப்பிய யூனியன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 120-க்கும் மேற் பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித் துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனா வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. உலகின் பல்வேறு நாடு களுக்கும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரு கிறது. உலகம் முழுவதும் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆய்வக வைரஸ்

வூஹான் நகரின் மீன் சந்தை யில் அனைத்து வகையான இறைச்சி வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த சந்தை யில் வவ்வாலை சாப்பிட்ட பாம்பு விற்பனை செய்யப்பட்டதாகவும், பாம்பு இறைச்சி மூலமாகவே கரோனா வைரஸ் மக்களுக்கு பரவியது என்றும் சீன அரசு கூறி வருகிறது. இதை உலக நாடுகள் நம்ப மறுத்து வருகின்றன.

வூஹான் நகரில் சீன அரசின் வைரஸ் ஆய்வுக் கூடம் செயல்படு கிறது. இந்த ஆய்வகத்தில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குற்றம்சாட்டி வருகின் றன. கரோனா வைரஸ், ஆய்வகத் தில் உருவாக்கப்பட்ட கிருமி என்று இந்திய அமைச்சர் நிதின் கட் கரியும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச நிபுணர்கள் குழு சீனாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க மாட்டோம் என்று சீனா வாதிட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் தற் போதைய தலைவர் டெட்ராஸ் அதா னான் கேப்ரியாசஸ், எத்தியோப் பியா நாட்டைச் சேர்ந்தவர். சீனா வின் உதவியுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இதன்காரணமாக கரோனா வைரஸ் விவகாரத்தில் ஆரம்பம் முதலே சீனாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். வைரஸ் குறித்த உண்மைகளை சீனாவோடு சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் மறைத்துவிட்டது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், கேப்ரியாசஸும் பேசிய ஒலிநாடாவும் இணைய தளத்தில் அண்மையில் வெளி யானது. இதே குற்றச்சாட்டை வலு வாக முன்வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கான நிதியுத வியை அண்மையில் நிறுத்தினார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை வகுக் கும் பிரிவான உலக சுகாதார சபை யின் 2 நாள் மாநாடு, ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. முதல்முறை யாக இந்த மாநாடு காணொலி காட்சி மூலம் நடக்கிறது. மாநாட் டுக்கு முன்னதாக உலக சுகாதார அமைப்பிடம் ஐரோப்பிய யூனி யன் சார்பில் தீர்மானம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கரோனா வைரஸ் எங்கு தோன்றியது, உலகம் முழுவதும் மக்களிடம் வைரஸ் பரவ யார் கார ணம் என்று விசாரணை நடத்த வேண் டும். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று விளக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு இந்தியா உட்பட 120-க்கும் மேற் பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித் துள்ளன. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

ஆதரவு பெருகிறது

இந்த தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதில் முக்கிய பங்கு வகிக் கும் ஆஸ்திரேலியா, தீர்மானத் துக்கு ஆதரவு பெருகுவதை வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிசே பேனே, ‘‘நாம் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் முக்கிய பங்கு வகிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனின் வரை வுத் தீர்மானத்துக்கு பிரிட்டன், சவுதி அரேபியா, கத்தார், ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த 54 நாடுகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கரோனா விவகாரத்தில் சீனாவின் பங்கு பற்றி மட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள், குறிப்பாக அதன் இயக்குநர் ஜெனரலின் பங்களிப்பு குறித்தும் பரிசீலிக்க தீர்மானம் வலியுறுத்துகிறது.

சர்வதேச நீதிமன்ற விசாரணை

உலக சுகாதார அமைப்பில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள் ளன. இதில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவுக்கு எதிராக திரும்பி யுள்ளன. இதர நாடுகளையும் சீனாவுக்கு எதிராக திருப்ப அமெ ரிக்கா தீவிர முயற்சி செய்து வரு கிறது. ஜெனீவா மாநாட்டில் அமெ ரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி மோதல் நடை பெறும் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பில் தீர்க் கப்படாத பிரச்சினைகள், தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத் துக்கு அனுப்பப்படும். அதன்படி கரோனா வைரஸ் பிரச்சினையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப் பப்படலாம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு பலன் அளிக்காது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x