

எகிப்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு மக்கள் கூடுவார்கள் என்பதால் கரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை அந்நாட்டு அரசு கடுமையாக்குகிறது.
இதுகுறித்து எகிப்து பிரதமர் முஸ்தபா கூறும்போது, “எகிப்தில் ரம்ஜான் விடுமுறையில் கடைகள்,உணவு விடுதிகள், கடற்கரைகள் ஆகியவை மூடப்படுகின்றன. இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்
பொது போக்குவரத்தை உபயோகப்படுத்தும் மக்கள் அனைவரும் மாஸ்குகளை பயன்படுத்துமாறு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்குகள் பற்றாக்குறையை தவிர்க்க அரசு நிறுவனங்கள் மாஸ்க் உற்பத்தியில் இறங்கி உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில், ரம்ஜானுக்குப் பிறகு காலை 8 மணி முதல் 6 மணி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எகிப்தில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து எகிப்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ எகிப்தில் இதுவரை 12,229 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 630 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 48, 05,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,16,732 பேர் உயிரிழந்துள்ளனர். 18, 60,056 பேர் மீண்டுள்ளனர்.