Last Updated : 18 May, 2020 10:37 AM

 

Published : 18 May 2020 10:37 AM
Last Updated : 18 May 2020 10:37 AM

கோவிட்-19 வைரஸில் உலக சுகாதார அமைப்பு செயல் குறித்து விசாரணை தேவை: 62 நாடுகள் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு; இன்று பொதுக்குழுக்கூட்டத்தில் பரிசீலனை

உலகதத்தையே அச்சுறுத்திவரும் கோவிட்-19(கரோனா வைரஸ்) ைவரஸ் எவ்வாறு உருவானது, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது, பரவியதற்கு காரணம் என்ன, உலக சுகாதார அமைப்பு இதைத்தடுக்க செய்த நடவடிக்கை என்ன என்பது குறித்த சார்பற்ற விசாரணை தேவை என்று 62 நாடுகள் வைத்த கோரிக்கைக்கு இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளது

சீனாவை ஓரங்கட்ட அமெரிக்க, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 62 நாடுகள் காய்நகர்ததும் வேளையில் இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளது. உலக சுகாதாரஅமைப்பின் 73-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் இன்று ஜெனிவாவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 62 நாடுகளும் சேர்ந்து தாக்கல் செய்த வரைவு அறி்க்கை குறித்து விவாதித்து பரிசீலக்கப்பட உள்ளது.

உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.16 லட்சம் பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் மிக மோசமாக அமெரிக்காதான் பாதிக்கப்பட்டது. அந்நாட்டில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் சீனாவில் உருவாகினாலும் அதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும்தான். இதனால் கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது, அதைத்தடுக்க உலக சுகாதார அமைப்பு எவ்வாறு முனைப்பு காட்டியது குறித்த சுயசார்பு விசாரணை தேவை 62நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த 62 நாடுகள் கோரிக்கைக்குக்கும் இந்தியா ஆதரவு அளி்த்துள்ளது. கரோனா வைரஸுக்கு இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 ஆயிரத்தை நெருங்குகிறது உயிரிழப்பு.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர்மோடி, உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்கள் அவசியம், நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை என்பதை வலியுறுத்தி மறைமுகமாக ஆதரவு தெரிவித்தார்

அமெரிக்கா, பிரி்ட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, சீனாவின் ஆய்வகங்களி்ல் இருந்து உருவானது என குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா மறுக்கிறது. மாறாக, அமெரிக்க ராணுவ வீரர்கள் சீனா வந்து சென்றபின்புதான் கரோனா உருவானது என சீனா பதிலுக்கு குற்றம்சாட்டியது.

மேலும், சீனாவுடம் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸின் ஆபத்தையும், மனித குலத்துக்கு விளைவிக்கும் சேதத்தையும் மறைத்துவிட்டது எஎ்று அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். மேலும், உலக சுகதார அமைப்புக்கான அமெரிக்க நிதியையும் நிறுத்திவைத்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்நிலையில் ஜெனிவா நகரில் உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கும் 73-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் 62 நாடுகள் சேர்ந்து உருவாக்கிய வரைவு அறிக்கை மீது ஆலோசனை நடத்தப்படுகிறது

. இந்த அறிக்கையை கனடா, ரஷ்யா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, துருக்கி, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துள்ளன.

7 பக்க வரைவு அறிக்கையில் “கரோனா வைரஸை தொடக்க நிலையிலிருந்து உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை மூலம் பெறப்பட்ட அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

கரோனா வைரஸால் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் பார்த்து ஆழ்ந்த வேதநை கொள்கிறோம். இந்த கரோனா வைரஸ் மனித சமுகத்துக்கு உடல்ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தி் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுகளுக்கு இடையே பொருளாதார ரீதியாக இருந்த ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளியை இந்த வைரஸ் மேலும் அதிகப்படுத்தியுள்ளது

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவிக்கிறோம். கரோன வைரஸைத் தடுக்க உலக உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை, தயாரானது, செயல்பாடுகள் குறித்து சார்பற்ற, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x