Last Updated : 18 May, 2020 08:01 AM

 

Published : 18 May 2020 08:01 AM
Last Updated : 18 May 2020 08:01 AM

கரோனாவுக்கு 2 லட்சம் பேர் பலியாகும் ஆபத்து என உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்தும் மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதிகள் திறப்பு

அனைத்துலக மக்கள் பெருந்தொற்றான கரோனாவுக்கு ஆப்பிரிக்காவில் முதல் ஆண்டில் சுமார் 1,90,000 பேர் பலியாவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தும் மசூதிகள் அங்கு திறக்கப்பட்டுள்ளன.

ஆம் ஆயிரக்கணக்கானோர் ரமலான் மாதத்தில் கரோனா அச்சுறுத்தலிலும் மசூதியில் தொழுகைக்காக கூடியுள்ளனர், காரணம் அதிகாரிகள் தொழுகையை அனுமதித்துள்ளனர்.

டாக்கரில் உள்ள மசாலிகுல் ஜினான் மசூதியில் வரிசையாக தொழுகைக்காக முஸ்லிம் மக்கள் காத்திருக்க அவர்களுக்கு கை கிருமி நாசினி அளிக்கப்பட்டது, சீருடை அணிந்த போலீஸார் மக்களை ஒழுங்குபடுத்துவதில் முனைப்பு காட்டி வந்தனர்

மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மசூதியான இதில் 3000 பேர் தொழுகை செய்ய காத்திருந்தனர்.

58 வயது டெய்லர் சால் என்பவர் கூறும்போது, “நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் ஆனால் நேர்மையாகக் கூற வேண்டுமெனில் எங்களால் வைரஸிலிருந்து தப்ப முடியாது. சுகாதார அதிகாரிகள் கூறிய தற்காப்புடன் இருந்தால் கடவுள் எங்களைக் காப்பாற்றுவார்.” என்றார்

உலகச் சுகாதார அமைப்பு கரோனா பெருந்தொற்றுக்கு சுமார் 1,90,000 ஆப்பிரிக்கர்கள் முதல் ஆண்டில் பலியாகலாம் பிற நோய்களுக்கும் பலர் பலியாகலாம் காரணம் அங்கு இருக்கும் குறைந்த அளவிலான மருத்துவ வசதிகளே என்று எச்சரித்திருக்கும் நிலையில் அங்கு மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்கா முழுதுமே ரம்ஜான் மாதமாகையால் மசூதிகளை பூட்டி வைப்பது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது.

புனித ரமலான் மாதத்தில் மக்கள் தொழுகையைக் கட்டுப்படுத்த அரசு அங்கு திணறி வருகிறது.

கடந்த வாரம் நைஜர், செனகல் பெரிய அளவில் எண்ணிக்கையுடன் தொழுகையை அனுமதித்தது, நைஜீரியாவில் 5000 பேர் கரோனாவுக்கு பாதிப்படைந்துள்ள போதும் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன.

மேற்கு ஆப்பிரிக்காவில் மருத்துவமனைகள்குறைவு, வெண்ட்டிலேட்டர்கள் ஏறக்குறைய இல்லவே இல்லை என்றே கூறலாம். கரோனா அச்சத்தில் மெக்காவே மூடப்பட்ட நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதிகள் திறப்பு உலகச் சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x