Last Updated : 18 May, 2020 07:33 AM

 

Published : 18 May 2020 07:33 AM
Last Updated : 18 May 2020 07:33 AM

பிரிட்டனில் கரோனா பலி எண்ணிக்கை 34,636 ஆக அதிகரிப்பு

170 கரோனா நோயாளிகள் பலியானதையடுத்து பிரிட்டனில் கரோனா பலி எண்ணிக்கை 34,636 ஆக அதிகரித்துள்ளதாக வர்த்தகம், எரிசக்தி, தொழிற்துறைச் செயலர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள், இல்லங்கள், சமூகத்தில் பரவலாக நிகழ்ந்த கோவிட்-19 மரணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

அலோக் சர்மா கூறும்போது “நோயை ஆட்கொண்டு மீள நமக்கு பாதுகாப்பான வேலை செய்யக்கூடிய வாக்சைன் தேவை. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக வாக்சைன் பரிசோதனை முதற்கட்டத்தில் பங்கேற்றோர் அனைவருக்கும் வாக்சைன் அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவர்கள் இப்போது கண்காணிப்பில் உள்ளனர்.

வாக்சைன் கிளினிக்கல் சோதன உள்ளிட்ட சோதனைகளுக்காக அரசு கூடுதலாக 84 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்கிறது.

சோதனையில் வாக்சைன் வெற்றிகரமானால் இதனை பெரிய அளவில் தயாரிக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

சோதனைகள் வெற்றிகரமானால் ஆஸ்ட்ராசெனெகா நிறுவனம் செப்டம்பர்வாக்கில் 30 மில்லியன் வாக்சைன் டோஸ்களை பிரிட்டனுக்காக உற்பத்தி செய்ய உலக உரிம ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ‘யுகே பயோபேங்க் ஆய்வு’ என்ற ஒன்றை நாவல் கரோனா வைரஸ் பரவலைக் கண்டுப்பிடிக்க பிரிட்டன் அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதில் குறைந்தது 6 மாதங்களுக்கு 20,000 பேர் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

விரல் மூலம் எடுக்கப்பட்டும் ரத்த மாதிரிகள் இந்தச் சோதனையில் பங்கேற்பவர்களிடமிருந்து பெறப்படும். இதுதவிர நோய் அறிகுறிகள் பற்றி இவர்களிடம் வினாவிடை மாதிரியில் கேள்வி கேட்கப்படும். முதற்கட்டமாக இதில் பங்கேற்றவர்களின் சாம்பிள் சோதனை முடிவுகள் ஜூன் ஆரம்பத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று அலோக் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x