இலங்கை பொதுத் தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றி

இலங்கை பொதுத் தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றி
Updated on
1 min read

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்தது 14 இடங்களை வெல்வது உறுதியாகி விட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் இக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழர் தேசிய கூட்டமைப்பு இதுவரை 10 இடங்களை வென்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 தொகுதிகளையும், வன்னு மாவட்டத்தில் 4 தொகுதிகளையும், திரிகோணமலை மாவட்டத்தில் 1 தொகுதியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இது தவிர அங்குள்ள தமிழர் மாவட்ட தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தொகுதிகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தொகுதியும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே 14 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றால் தேசியப் பட்டியலில் ஒரு இடம் கிடைக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாது, வாக்குகள் எண்ணிக்கையும் ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகரித்திருப்பதாகவே தேர்தல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in