இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள், ஆய்வாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள், ஆய்வாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
Updated on
1 min read

மகா கொடிய கரோனா வைரஸுக்கு மருந்துகள், வாக்சைன்கள் தயாரிப்பதில் இந்திய அமெரிக்க விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் முயர்சிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி அமெரிக்கா அனைத்துலக மக்கள் தொற்றான கரோனாவை எதிர்கொள்கிறது.

“அமெரிக்காவில் பிரமாதமான இந்திய மக்கள் இருக்கிறார்கள், இதில் பலரும் வாக்சைன் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

அதாவது கரோனாவை எதிர்த்து அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை இந்திய அமெரிக்கர்கள் பாராட்டியதற்கு ஒரு பரிசாக ட்ரம்ப் இந்திய அமெரிக்கர்களைப் பாராட்டியுள்ளார்.

இந்திய அமெரிக்க சமூகத்தினரின் விஞ்ஞான, ஆராய்ச்சி திறமையை முதன் முதலில் அதிபர் பாராட்டுவதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ விஞ்ஞானத்தின் பலதரப்பட்ட காரணிகளுடன் இந்திய அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதில் 25 லட்சம் பேர் 2020 அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

2016-ல் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் இந்திய-அமெரிக்கர்களைக் கவர்வதற்காகவே தனி தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களை நடத்தியவர்.

அது முதலே அவர் வெள்ளை மாளிகையில் இந்தியா மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் சிறந்த நண்பன் என்று கூறிவருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in