Last Updated : 16 May, 2020 09:16 AM

 

Published : 16 May 2020 09:16 AM
Last Updated : 16 May 2020 09:16 AM

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அன்பளிப்பாக வழங்குகிறது அமெரிக்கா; பிரதமர் மோடியோடு துணை நிற்பேன்: அதிபர் ட்ரம்ப் உறுதி

அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி : கோப்புப்படம்

வாஷிங்டன்

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அமெரிக்கா அன்பளிப்பாக வழங்க உள்ளது, இந்த இக்கட்டாந நேரத்தில் இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் துணை நிற்போம் என்று அதிபர் ட்ரம்ப் நட்பு பாராட்டிப் பேசியுள்ளார்

கரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு உதவ 5 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரதமர் மோடி கடந்த மாதம் அனுப்பி வைத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவைக் காட்டிலும் அதிகரித்து 85ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா நோயாளிகளில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் சுவாசப் பிரச்சினை ஏற்படும்போது அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வென்டிலேட்டர்கள் பயன்படும்.

அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ இந்தியாவில் உள்ள நமது நண்பர்களுக்காக வென்டிலேட்டர்களை அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கஉள்ளது என்ற செய்தியை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில்இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் நாங்கள் துணைநி்ற்போம். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் இணைந்து செயல்பட்டு, கண்ணுக்கத் தெரியா எதிரி கரோனா வைரஸைத் தோற்கடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் எத்தனை வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது என்பதை அதிபர் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.

வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் ஊடகங்களிடம் கூறுகையில் “ இந்தியாவுக்கு ஏராளமான வென்டிலேட்டர்களை அன்பளிப்பாக வழங்க இருக்கிறோம். நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். இப்போது சில வென்டிலேட்டர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம், இன்னும் ஏராளமாக வரவேண்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியா மிகச்சிறந்த நட்பு நாடு, பிரதமர் மோடியும் எனக்கு சிறந்த நண்பர் என்பதை அறிவீர்கள். நான் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று திரும்பினேன், இருவரும் நெருக்கமாகிவிட்டோம். புதுடெல்லி, அகமதாபாத், ஆக்ரா போன்ற நகரங்களையும் பார்த்து ரசித்தேன். கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் இந்தியாவுடன் இணைந்ுது நாங்கள் செயல்படுவோம். அமெரிக்காவின் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு இந்திய ஆராய்ச்சியாளர்கள் சிறந்த பங்களிப்பு செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் கேலே மெக்னானி கூறுகையில் “ இந்தியாவுடன் அமெரிக்கா வைத்திருக்கும் நட்புக்கு அதிபர் பெருமை கொள்கிறார். இந்திய சிறந்த நட்புநாடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள அமெரிக்க அனுப்ப இருக்கிறது” என்று உறுதி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x