Last Updated : 13 May, 2020 10:02 AM

 

Published : 13 May 2020 10:02 AM
Last Updated : 13 May 2020 10:02 AM

சீனா மீது பொருளாதாரத் தடைகள்: கோவிட்-19 பொறுப்பேற்புச் சட்டம்- ட்ரம்புக்கு செனட்டர்கள் நெருக்கடி

அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்க ஒன்பது செனட்டர்கள் கரோனா வைரஸ் தொடர்பான பொறுப்பேற்பில் சீனா ஒத்துழைக்காவிட்டால் அதன் மீது பொருளாதாரத் தடைகளைப் பிறப்பிக அதிபரூக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தீர்மானம் ஒன்றை காங்கிரசில் அறிமுகம் செய்தனர்.

அமெரிக்காவில் கோவிட்-19 பலி எண்ணிக்கை 80,000-த்தைக் கடந்தது, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சம் கேஸ்களானது.

கோவிட்-19 பொறுப்பேற்பு சட்டம் என்பதை செனட்டர் லிண்ட்சே கிரகாம் என்பவர் 8 செனட் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயற்றியுள்ளார்.

இதன்படி கோவிட்-19 மீதான அமெரிக்க விசாரணையில் சீனா அல்லது ஐநா அல்லது உலகச் சுகாதார அமைப்பு 60 நாட்களுக்குள் முழு மற்றும் பூர்த்தியான விவரங்களை அளிக்க வேண்டும் என்பதை அதிபர் ட்ரம்ப் உறுதி செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும் , மேலும் அனைத்து விலங்குச் சந்தைகளும் மூடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்தச் சான்றிதழ் இல்லையெனில் அதிபர் சீனா மீது ஏகப்பட்ட தடைகளை சுமத்தலாம், அதாவது சொத்துக்கள் முடக்கம், பயணத்தடைகள், விசா தடைகள், அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் சீன நிறுவனங்கள் லிஸ்ட் ஆகாமல் தடுப்பது, அமெரிக்க நிறுவனங்கள் கடன் கொடுப்பதையும், சீன நிறுவனங்களுக்குத் தடையையும் விதிக்க வேண்டும்.

”சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏமாற்று இல்லை எனில் அமெரிக்காவில் வைரஸ் இருந்திருக்காது” என்று கிரகாம் தெரிவித்தார்.

“பன்னாட்டுச் சமுக்கம் வூஹான் லேபிற்குள் செல்ல சீனா அனுமதி மறுக்கிறது. இந்த வைரஸ் எப்படி பரவியது என்பதை ஆய்வு செய்ய விசாரணையாளர்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறது சீனா. சீரியஸான விசாரணைக்கு கட்டாயப்படுத்தப்பட்டாலே தவிர சீனா நிச்சயம் ஒத்துழைக்காது. இந்த சட்டம் விசாரணையாளர்களுடன் சீனா ஒத்துழைக்கும் வரை தடைகளை ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்பதை நாம் நிர்ணயித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும். மீண்டும் இப்படிப்பட்ட ஒன்று நிகழ்தல் கூடாது. சீனாவை இதற்குப் பொறுப்பேற்கச் செய்யும் காலம் இதுதான். 80,000த்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்தனர். கோடிக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இது ஏனெனில் சீனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவில்லை” என்றார் கிரகாம்

செனட்டர் ஜிம் இன்ஹோஃபே கூறும்போது, “கோவிட் பொறுப்பேற்பு சட்டம் சீனாவை பொறுப்பேற்க வைக்கும் சட்டமாகும். அமெரிக்கா வலுவானது இதிலிருந்து மீண்டு விடும். ஆனால் சீனா உண்மைகளை எதிர்கொள்ள வேண்டி வரும், அவர்கள் செய்த காரியத்துக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.

கட்டாயப்படுத்தப்பட்டாலே தவிர சீனா ஒத்துழைக்காது, இந்தச் சட்டம் அதிபருக்கு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் வழங்குகிறது. அப்போதுதான் எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவல் ஏற்படாது.

சீனாவுக்கு தெளிவான வலுவான செய்தியை அனுப்ப வேண்டும் அவர்களது அலட்சியமான செயல்பாடுகளுக்கு விளைவுகள் உண்டு என்பதை அவர்கள் அறிய வேண்டும்” என்றார்

பல்வேறு செனட்டர்களுன் சீனாவை கடுமையாக விமர்சித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x