Published : 12 May 2020 09:39 PM
Last Updated : 12 May 2020 09:39 PM

ஜுன் வரை மூடப்படுகிறது நியூயார்க்

கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நியூயார்க் மாகாணம் தற்போது முழு திறப்புக்கு தயாராகி வருகிற நிலையில், அதிக மக்கள் தொகைகொண்ட நியூயார் நகரம் ஜூன் மாதம் வரை மூடப்படும் என்று நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ தெரிவித்துள்ளார்.

ஒப்பிட்டுள்ளவில் நியூயார்க்கில் தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருந்தபோதிலும் தற்போது அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக திறக்க முடியாது. முதற்கட்டமாக மூன்று பிராந்தியங்கள் வரும் 15-ம் தேதி திறக்கப்படும். நியூயார்க் நகரம் ஜூன் மாதம் வரை மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிற மாகாணங்களைவிட நியூயார்க் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 15- தேதி முதல் நியூயார்க் மாகாணத்தில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 காரணிகளை அடிப்படையாக் கொண்டு பிராந்தியங்களின் தொழில் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்தவகையில் பிங்கர் லேக்ஸ், சதர்ன் டயர், மொஹாக் வேலி ஆகிய பகுதிகள் வரும் 15-ம் தேதி திறக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக இங்கு உற்பத்தி, கட்டுமானம், விவாசயம் உட்பட முக்கியத் தொழில்கள் செயல்படும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரியூ க்யூமோ அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ”கரோனா பாதிப்பு குறைவாக உள்ளப் பகுதிகளைத் திறந்து வருகிறோம். கரோனா வைரஸுக்கு எதிரான புதிய அத்தியாத்தை தொடங்குகிறோம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் கரோனா வைரஸின் தாக்கத்தைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்குறோம். அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், ஆய்வாளர்கள் குழு அந்தந்தப் பிராந்தியங்கள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளும். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும்”என்று தெரிவித்தார்.

2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நியூயார்க் மாகாணத்தில் இதுவரைக்கும் 3,37,055 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 26,000 பேர் இறந்துள்ளனர். இதில் நியூயார்க் நகரில் மட்டும் 1,83,662 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 14,928 பேர் இறந்துள்ளனர். மொத்த அளவில் அமெரிக்காவில் 13.8 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.2 லட்சம் பேர் மீண்டுள்ள நிலையில் 82 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x