

அமெரிக்காவில் தற்போது அதிபர் ட்ரம்ப்பை விடவும் செல்வாக்கு மிக்க மனிதர் வெள்ளை மாளிகை கரோனா பணிக்குழுவில் உள்ள டாக்டர் ஃபாஸி உட்பட 3 பேர் கரோனா தொற்று ஐயத்தினால் சுய தனிமைக்குச் சென்றனர்.
கரோனா பாசிட்டிவ் நபர் ஒருவருடன் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டதால் சந்தேகத்தின் அடிப்படையில் டாக்டர் ஃபாஸி உட்பட 3 பேர் சுய தனிமைக்குச் சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் கழக இயக்குநர் டாக்டர் ஃபாஸி, இவர் கரோனா பற்றி மக்களுக்கு புரியும்படியாக நேரடியாக எளிமையாக விளக்குவதில் வல்லவர். இவரும் தனிமைக்குச் சென்று விட்டார்.
டாக்டர் ராபர்ட் ரெட்பீல்ட் என்ற அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய மருத்துவர் மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழக ஆணையர் ஸ்டீபன் ஹான் ஆகியோர் கரோனா தொற்று ஐயத்தினால் சுயதனிமைக்குச் சென்றனர்.
இதில் ஃபாஸிக்கு டெஸ்ட்டில் நெகெட்டிவ் என்று வந்தாலும் இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்படும் என்று அவர் சார்ந்த மருத்துவக் கழகம் தெரிவிக்கிறது. ஆனாலும் அவர் தன் கடமையிலிருந்து விலகாமல் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மூவரும் செவ்வாயன்று செனேட் கமிட்டி முன் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும். இதனை வீடியோ மூலம் மேற்கொள்வார்கள் என்றே தெரிகிறது.