சவுதிக்கு தொடர்ந்து ராணுவ உதவி வழங்கப்படும்: ட்ரம்ப் உறுதி

சவுதிக்கு தொடர்ந்து ராணுவ உதவி வழங்கப்படும்: ட்ரம்ப் உறுதி
Updated on
1 min read

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவி வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சவூதி மன்னர் சல்மான் இருவரும் பாதுகாப்புத் தொடர்பாக தொலைபேசியில் நேற்று உரையாடினர். அப்போது இருநாடுகளுக்கிடையேயான பாதுக்காப்பு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”சவுதிக்கு அமெரிக்க தொடர்ந்து பாதுக்காப்பு வழங்கும் என்று ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். இருதலைவர்களும் எரிபொருள் சந்தையில் நிலவி வரும் நிச்சயமின்மையை சரிசெய்வது குறித்தும், உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் இருநாட்டுக்கிடையேயான இருதரப்பு உறவு குறித்தும் பேசினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏமன் உடனான அரசியல் பிரச்சினைகளுகக்கு தீர்வு ஏற்படுத்த அமெரிக்க சவுதிக்கு உதவி புரியும் என்றும் உத்திரவாதம் அளித்திர்ப்பதாக சவூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் எண்ணெய் தேவை குறைந்துள்ள நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் சவுதிய அரேபியா அதன் எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும். இல்லையென்றால் சவுதிக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ உதவிகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று எச்சரித்தது.

இச்சூழலில்தான் தற்போது இருநாட்டு தலைவர்களும் உரையாடியுள்ளனர். அதேசமயம் அமெரிக்கா சவுதியில் நிறுத்தி இருக்கும் இரு ஏவுகனையை திரும்பப் பெறப்போவதாக கூறப்பட்டுவந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து மைக பாம்பியோ கூறும்போது, “ஏவுகனைகள் குறிப்பிட்ட காலத்துக்குத்தான் அங்கே இருக்கும். அவற்றைத் திரும்பப் பெறுவது வழக்கமான ஒன்று. அவ்வாறு திரும்ப பெறுவது அமெரிக்கா சவுதிக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை திரும்பப் பெறுவதாக அர்த்தமில்லை” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in