Published : 06 May 2020 08:15 PM
Last Updated : 06 May 2020 08:15 PM

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாத்திரைகள்; எச்சரிக்கையை ட்ரம்ப் கேட்கவில்லை - அமெரிக்கா ஆராய்ச்சியாளர் குற்றச்சாட்டு

இந்தியாவின் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளின் இறக்குமதி குறித்து அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்த எச்சரிக்கையை டிரம்ப் நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை என்று அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் ரிக் பிரைட் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ரிக் பிரைட் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ”இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மருந்து நிறுவனங்களிடமிருந்து அமெரிக்கா இந்தியாவின் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளின் இறக்குமதி குறித்து எங்கள் எச்சரிக்கையை ட்ரம்ப் கேட்கவில்லை. அந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மீது எவ்வித தரச் சோதனையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில் அங்கிருந்து பெறப்படும் மருந்துகளில் கிருமித் தொற்று இருப்பதற்கான அனைத்தும் சாத்தியங்களும் இருக்கிறது. இவ்வாறு சோதனைச் செய்யபடாத மருந்துகளைப் பயன்படுத்துவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்று நானும் பிற மருத்துவர்களும் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். ஆனால் அமெரிக்க நிர்வாகம் எங்கள் கருத்துக்கு செவிசாய்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் ஹைட்ராக்ஸில் குளோரைன் மருந்து தயாரிப்பு மையமாக விளங்கிவரும் இந்தியா, கரோனா பரவலை அடுத்து அம்மருந்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதித்தது. அமெரிக்காவில் கரோனா எண்ணிக்கை அதிகரிக்கதைத் தொடர்ந்து, இந்தியா இந்தியாவின் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளின் இறக்குமதி மீதான ஏற்றுமதி தடைய நீக்க வேண்டும் என்றும் உடனடியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.

மும்பையைச் சேர்ந்த இப்கா மற்றும் குஜராத்தைத் தலைமையிடமாக கொண்ட சைடஸ் காடிலா ஆகிய இரு நிறுவனங்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிப்பில் மிக முக்கிய நிறுவனங்களாக விளங்குகின்றன. இதில் இப்கா நிறுவனம் முறையாக தயாரிப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா அந்நிறுவனத்திலிருந்து மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து இருந்தது. தற்போது அமெரிக்காவில் ன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அந்நிறுவனம் மீதான தடையை நீக்கியுள்ளது.

இந்நிலையிலேயே இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நம்பகத் தன்மை குறித்து பிரைட் உள்ளிட்ட அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

உயிர்மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்துவந்த ரிக் பிரைட் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x