

ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்றால் அதிகப்பட்ச உயிரிழப்பு யுகேவில் பதிவாகியுள்ளது.
கரோனாவால் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகப்பட்ச உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது யுகே அந்த எண்ணிக்கையை கடந்துள்ளது.
இதுகுறித்து யுகே வெளியுறவுச் செயலாளர் டோமினிக் ராப் கூறும்போது, “ யுகேவில் கரோனா தொற்றுக்கு 29,427 பேர் பலியாகி உள்ளனர். இது மிகவும் துயரமானது” என்று தெரிவித்துள்ளார்.
யுகேவில் இவ்வாரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட இருக்கும் நிலையில், பொருளாதாரத்திற்காக ஊரடங்கை தளத்துவது ஆபத்தான முடிவை தரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
யுகேவில் கரோனா தொற்றால் 194,990 பாதிக்கப்பட 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யுகே சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யுகேவில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
உலக முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 37, 27,865 பாதிக்கப்பட்டுள்ளனர். 2,58,340 பலியாகியுள்ளனர். 12, 42,393 பேர் குணமடைந்துள்ளனர்.