

‘‘கரோனா வைரஸ் தொற்றின் தீவி ரத்தை உலக நாடுகளிடம் சீனா மறைத்துவிட்டது. அதன்மூலம் மருந்து பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து பதுக்கிக் கொண்டுள்ளது’’ என்று அமெ ரிக்க உள்துறை பாதுகாப்புப் புலனாய்வுத் துறை தயாரித்துள்ள அறிக்கையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் உலகம் முழு வதும் பரவிய பிறகு அமெரிக்கா வின் பல்வேறு துறைகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. சீனாதான் இதற்குக் காரணம். கரோனா வைரஸ் குறித்த உண்மையை கண்டறிவோம். உலக நாடுகளுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். அதற்கான விலை யைக் கொடுத்தாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க உள்துறையின் கீழ் செயல்படும், பாது காப்புப் புலனாய்வுத் துறையினர் கரோனா வைரஸ் குறித்து தீவிர விசாரணை மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ள னர். நான்கு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, ‘ரகசியம்’ என்று குறிப்பிடப்படவில்லை. எனினும், ‘அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள் ளது. அந்த அறிக்கை அமெரிக்க செய்தி நிறுவனத்துக்குக் கிடைத் துள்ளது.
அந்த அறிக்கை குறித்து வெளி யான செய்தியில் கூறியிருப்ப தாவது:
கரோனா வைரஸின் தீவிரத்தை சீனத் தலைவர்கள் உள்நோக் கத்துடன் மறைத்துவிட்டனர். கடந்த ஜனவரி மாதமே வைரஸின் தீவி ரத்தை சீனா கூறியிருந்தால், இவ் வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், கரோனா வைரஸின் தீவி ரத்தை அறிந்திருந்த சீனா, மருந் துப் பொருட்கள் ஏற்றுமதியை கணிசமாகக் குறைத்து கொண்டுள் ளது. அத்துடன் மருந்துப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது. குறிப் பாக முகக் கவசங்கள், கையுறை கள், மருத்துவ கவச உடைகள் மருத்துவப் பொருட்களை இறக்கு மதி செய்துள்ளது.
சீனாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் திடீ ரென பெரும் மாற்றம் காணப் பட்டுள்ளது. இது வழக்கமானதாக தெரியவில்லை. எனவே, கரோனா வைரஸின் தீவிரத்தை சீனா நன்கு அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.