

இந்தோனேசிய விமான விபத்தில் பலியான 54 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.
இந்தோனேசியாவின் ஜெயபுரா வில் இருந்து ஓக்சிபில் பகுதிக்கு கடந்த 16-ம் தேதி பிற்பகலில் தனியார் பயணிகள் விமானம் புறப் பட்டது. 49 பயணிகள், 5 ஊழியர் களுடன் சென்ற அந்த விமானம் பின்டாங் மலைப்பகுதியில் மோதி நொறுங்கியது.
மோசமான வானிலை, அடர்ந்த வனப்பகுதி என்பதால் சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினரால் உடனடியாக செல்ல முடியவில்லை. இரண்டு நாட்கள் மலையேற்றத்துக்குப் பிறகு சம்பவ பகுதியை மீட்புப் படையினர் நேற்று காலை கண்டுபிடித்தனர்.
விமானம் முழுமையாக நொறுங்கி 54 பேரும் உயிரிழந்து விட்டதாக மீட்புப் படையினர் அறிவித்துள்ளனர். விமானத் தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக் குள்ளாகி இருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.