20 சதவீதம் பேருக்கு வேலையில்லை: ஐக்கியஅரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்ப 1.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஆன்லைனில் பதிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தின் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.

இந்த இணையதளம் தொடங்கப்பட்ட 4 நாட்களில் அதாவது சனிக்கிழமை மாலை வரை ஒன்றறை லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்

கடந்த வாரம் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் துபாயில் உள்ள துணைத்தூதரகம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்காக தூதரகம் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, www.indianembassyuae.gov.in அல்லது www.cgidubai.gov.in மற்றும் www.cgidubai.gov.in/covid_register என்ற இணையதளத்தில் இந்தியர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடகப்பிரிவு அதிகாரி நீரஜ் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் “ தாயகம் திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவுசெய்தவர்களில் கால்வாசி இந்தியர்கள் இங்கு வேலைைய இழந்துவிட்டனர்.

திவு செய்த இந்தியர்களில் 40 சதவீதம் பேர் கட்டிட ேவலை, தூய்மை பணி, உணவத்தில் வேலை உள்ளி்ட்ட சாதாரண பணியைச் செய்பவர்கள், 20 சதவீதம் மட்டுமே நல்ல மதிப்பான நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள் இதுவரை வந்த விண்ணப்பங்களில் 55 சதவீதம் கேரள மாநிலத்தவர்கள்தான் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா, உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்யும் போது எண்ணிக்கை மேலும் அதிகரி்க்கும். இந்த விண்ணப்பங்களில் 10 சதவீதம் பேர் சுற்றுலாவுக்காக வந்து திரும்ப முடியாமல் சிக்கி இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவ ரீதியாக உதவிக்காக இருப்பவர்கள் குறைந்த அளவிலேயே விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்தியர்களை விமானம், அல்லது கப்பல் மூலமாக அழைத்துச் செல்வதா, டிக்கெட் விலை என்ன என்பது குறித்து மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்

இதனிடையே இந்திய விமானப்படை, கப்பல்படை, ஏர் இந்தியா ஆகியவற்றுடன் மத்திய வெளியுறவுத்துறை பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in