பாகிஸ்தானில் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று 75% அதிகரிப்பு

பாகிஸ்தானில் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று 75% அதிகரிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 75% கரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், ”பாகிஸ்தானில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 75% கரோனா தொற்று அதிகரித்துள்ளது. 400க்கும் அதிகமான சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பிற சுகாதாரத் துறை பணியாளர்களும் இதில் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு 16,817 பாதிக்கப்பட்டுள்ளர். 385 பேர் பலியாகியுள்ளனர். 4,315 பேர் குணமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா தொற்று பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், இங்கு கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in