அமெரிக்க போர்க் கப்பல்: கரோனா தொற்று ஏற்பட்ட மாலுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க போர்க் கப்பல்: கரோனா தொற்று ஏற்பட்ட மாலுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

'யுஎஸ்எஸ் கிட்' என்ற அமெரிக்க போர்க் கப்பலில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாலுமிகளின் எண்ணிக்கை தற்போது 78 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் இரண்டாவது அமெரிக்க போர்க் கப்பல் இதுவாகும்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “போர் விமானங்களைத் தாங்கி வரும் 'யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வல்ட்’ என்ற அமெரிக்கக் கப்பலில் முதலில் கரோனா தொற்று ஏற்பட்டது அதைத் தொடர்ந்து அக்கப்பலில் இருந்த 4000 மாலுமிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ’யுஎஸ்எஸ் கிட்’ என்ற இரண்டாவது போர்க் கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் அன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ கடற்படைத் தளத்தில் இந்தப் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டு கப்பலில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அக்கப்பலில் கரோனா தொற்றுக்குள்ளான மாலுமிகளின் எண்ணிக்கை தற்போது 78 ஆக அதிகரித்துள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

'யுஎஸ்எஸ் கிட்' போதைமருந்து கடத்தல் தடுப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸால் 10,64,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 61,669 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in