Published : 30 Apr 2020 04:18 PM
Last Updated : 30 Apr 2020 04:18 PM

கரோனாவால் 61,504 அமெரிக்கர்கள் உயிரிழப்பு: கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்கா பார்த்திராத நோய்த் தொற்று மரணம்

அமெரிக்காவில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை அமெரிக்கா அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “அமெரிக்காவில் கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட நோய்த் தொற்றுகளில் கரோனாவில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் கரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 73,000-ஆக உயர வாய்ப்புள்ளது. 1967-ல் ஏற்பட்ட நோய்த் தொற்றில் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இறந்தனர்.

1957-ல் ஏற்பட்ட நோய்த் தொற்றில் 1,16,000 பேர் இறந்தனர். அதற்கு முன்னதாக ஸ்பானிஷ் ப்ளூவில் 6,75,000 அமெரிக்கர்கள் இறந்தனர்.கடந்த 2017-18-ம் ஆண்டில் ஏற்பட்ட நோய் தொற்றில் சுமார் 61,000 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போதைய கரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை 61,500-ஐ தாண்டியுள்ளது; பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் நோய்த் தொற்றுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இதுவே அதிகம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

உலக அளவில் கரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 2,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா-வியட்நாம் இடையான போரில் இறந்த அமெரிக்கர்களை விட தற்போது கரோனாவால் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x