

வல்லரக்கனாக இருக்கும் கரோனாவுக்கும் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.28 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் குணமடைந்தோர் எண்ணிக்கை உலகளவில் 10 லட்சத்தைக் கடந்துள்ளது
அமெரிக்காவில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்திருந்த உயிரிழப்பு கடந்த இரு நாட்களாக அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 2,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் உருவாகிய கரோனா வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. கரோனா வைரஸின் பிடியிலிருந்து சீனா ஏறக்குறைய விடுவட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் சிக்கித் திணறிவருகின்றன.
கரோனா வைரஸால் உலகளவி்ல் பாதி்க்கப்பட்டோர் எண்ணக்கை 32 லட்சத்து 19 ஆயிரத்து 485 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக குணமடைந்தோர் எண்ணி்க்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டு வருவது அமெரிக்கா மட்டும்தான். இதுவரை அமெரிக்காவில் கரோனா பாஸிட்டிவ் நோயாளிகள் எண்ணி்க்கை 10 லட்சத்து 64 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது உலகளவில் மூன்றில் ஒரு பங்கு கரோனா நோயாளிகள் அமெரி்க்காவில் உள்ளனர்.
அமெரிக்காவில் இன்னும் உயிரிழப்பு குறைந்தபாடில்லை. அங்கு நேற்று கூட 2,500 ேபர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது. 1.47 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்
அடுத்ததாக ஸ்பெயின் கரோனாவில் 2.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 275 பேர் உயரிழந்துள்ளனர். 1.33 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்து வந்த இத்தாலியில் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. அங்கு இதுவரை 27,682 பேர் உயிரிழந்துள்ளனர், 2லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்
இதைத்தொடர்ந்து பிரான்ஸில் 1.66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24 ஆயிரம் ப பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் இதுவரை 1.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,உயிரிழப்பைப் பொறுத்தவரை 6,497 பேர் பலியாகியுள்ளனர்.